சினிமா மற்றும் சின்னத்திரையில், மகிழ்ச்சியாக நடிக்கும் நடிகைகள் பலரும் தங்கள் ரியல் வாழ்க்கையில் அத்தகைய மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி தான். பல நடிகைகள், திருமண ஆன சில ஆண்டுகளில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். ஆனால் விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா தனது கடந்த கால வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்து, கணவருக்கு பணம் கொடுத்து விவாகரத்து பெற்றதாக கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அரண்மனைக்கிளி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மோனிஷா. அதனைத் தொடர்ந்து சின்னத்தம்பி, பூவே பூச்சூடவா, ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2’ மற்றும் கலர்ஸ் டிவியின் ‘பச்சைக்கிளி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், சீரியல் மட்டும் இல்லாமல், சல்யூட், இனி உத்ரம் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ‘செகண்ட் லவ்’ (Second Love) என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பேசிய மோனிஷா, தனது8 ஆண்டுகள் திருமண வாழ்க்கை, நம்பிக்கை துரோகத்தால் எப்படி முடிவுக்கு வந்தது என்பதை மோனிஷா விவரித்துள்ளார். குறிப்பாக தான் முழுமையாக நம்பிய கணவர், ஒரு கட்டத்தில் தன் மீது சந்தேகம் கொண்டு தன்னை அடித்து சித்திரவதை செய்யத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
மேலும், தன்னை மிரட்டுவதற்காக, தனது அனுமதியின்றி பெட்ரூமில் தூங்குவது, ஆடை மாற்றுவதை போட்டோ, மற்றும் வீடியோக்கள் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஒருநாள் கணவரின் நண்பர்கள் வந்து, “உன்னுடைய பர்சனல் போட்டோக்களை எல்லாம் நாங்கள் பார்த்துவிட்டோம்” என்று சொன்னபோது, தன் உலகமே நொறுங்கிப் போனது. திருமணத்திற்குகு, நடிகையாக நல்ல வாய்ப்புகள் வந்தபோதும், தொடர்ந்து நடிக்க கணவர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, நான் உழைத்துச் சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர் தவறான வழிகளில் பயன்படுத்தியதால், அவர் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இனி இந்த மனிதருடன் வாழ்ந்தால் நம் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்து அவரிடம் விவாகரத்து கேட்டபோது, “விவாகரத்து தருகிறேன், ஆனால் உன்னுடைய 100 சவரனுக்கும் அதிகமான நகைகளைத் தர மாட்டேன் என்று சொன்னார். ஆனால், வேறு வழி இல்லாமல், அந்த நகைகளை இழப்பீடாகக் கொடுத்துவிட்டு நான் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விவாகரத்து பேப்பரில் கையெழுத்திட்ட போது எனக்கே தெரியாமல் துள்ளி குதித்துவிட்டேன்.
நான் துள்ளி குதிப்பதை பார்த்த நீதிபதி, “ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டுள்ளார். அந்த அளவிற்கு அவர் நரக வேதனையை அனுவித்திருந்தேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் மோனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
