மேலும் இது தொடர்பான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மாநிலத்தின் பிரத்யேக மரபுகளைப் பேண வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் மூன்றாவது பாடலாகப் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும்.
அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதே தமிழ்நாட்டின் நீண்டகால மரபு. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் அல்லது சுற்றறிக்கைகள் காரணமாக வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.
