பட்டியலின மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்ததா? தவெக–விசிக கூட்டணி பின்னணி -புயலைக் கிளப்பும் மூத்த பத்திரிக்கையாளர் – scheduled castes gain a share of power in the tvk-vck alliance? views of journalist sabir

திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வந்தது விசிக. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவில் இருந்து விலகி தவெக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளது.இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடந்த விசிக சார்பில் தேசிய எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சியில் இருந்த விசிகவும்.. இனி ஆளும் கட்சியாக உருவெடுக்கும் என்று கூறினார். தவெகவுடன் அரசியல் களத்தில் ஒன்றாக பயணிக்கும் என்றுக்கூறி தவெக – விசிக கூட்டணியை அறிவித்தார்.

விசிக – தவெக கூட்டணி

இந்த அறிவிப்புக்குப் பிறகு தவெக தலைமை ஆரம்பத்தில் அமைதி காத்து வந்த நிலையில், சமீபத்தில் தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசிக அலுவலகத்திற்கு நேரில் சென்று திருமாவளவனைச் சந்தித்து தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். மறுபுறம், இந்த கூட்டணி மாற்றத்தைக் கண்டித்து திமுகவினர் விசிகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

இந்த நிலையில் சமூக நீதித்துறை அமைச்சரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனியார் தொலைக்காட்சியில் திமுக குறித்து பேசிய கருத்துகள், தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தவெக – பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு

அப்போது பேசியவர்,மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சட்டங்கள், புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரானவை என்றும், சிறுபான்மையினரை பாதிப்பவை என்றும் தவெக தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளது.வெளிநாட்டு நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களைக் (NGOs) கட்டுப்படுத்தும்FCRA சட்டம் மற்றும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தங்கள் மூலமாகச் சிறுபான்மையினரின் உரிமைகளும் சொத்துகளும் குறிவைக்கப்படுவதாக விமர்சிக்கப்பட்டது.கிறிஸ்தவ நிறுவனங்கள் வழியே தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைத்த கல்விச் சேவைகளையும் சுட்டிக்காட்டி, பாஜக-வின் இத்தகைய சட்டத் திட்டங்களை எதிர்த்து தவெக தீர்மானங்களை முன்வைத்துள்ளது வலியுறுத்தப்பட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த நீதிமன்றங்களில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கும் தீர்மானத்தை, இன்றைய இளம் தலைமுறைக்கு (Gen Z) ஏற்ற வகையில் தவெக மீண்டும் முன் எடுத்துள்ளது நினைவு கூரப்பட்டது. இதன் மூலம் திராவிடக் கொள்கைகளையும் கலைஞரின் செயல்பாடுகளையுமே தவெக முன்னெடுத்துச் செல்கிறது என்பது தெளிவாக்கப்பட்டது.

வன்னியரசு திமுக விமர்சனம்

சட்டமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் குறித்த பேச்சுக்கள் வரும்போது, அவை குறிப்பிலிருந்து நீக்கக் கோருவது போன்ற பய உணர்வுகள் நிலவுவதாக வெளிப்படும் விமர்சனங்கள் நிராகரிக்கப்பட்டன. பாஜக-வோடு இணக்கமாகச் செல்ல வேண்டிய அவசியம் தவெக-விற்கு இல்லை .இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசிக போன்ற அமைப்புகளை அரசியல் ரீதியாக முடக்குவதற்காகவே எழுப்பப்படுகின்றன

தான் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரானவன் அல்ல என்றும், திராவிட இயக்கங்கள் செய்த நன்மைகளைத் தள்ளிவைத்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதேவேளையில் தலித் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தில் உள்ள போதாமைகளையே தான் சுட்டிக்காட்டுவதாகவும், ஒருவித வழியிலிருந்தே பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பட்டியலின மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்ததா?

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சபேர் கூறுகையில், திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்திற்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்துள்ளன. இருப்பினும், பட்டியலின சமூகத்திற்கு இன்னமும் முழுமையான அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அப்ப மக்களிடையே நீடிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பொதுத் தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தாமல், அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அடைத்து வைப்பது நியாயமான ஆதங்கமே என்று கூறினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. 44 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 8 பேருக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்துள்ள சூழல், நீண்ட காலமாக ஆட்சியில் பங்கு கோரி வரும் கட்சிகளுக்கு ஒரு புதிய பார்வையை அளித்துள்ளது. கொங்கு மண்டலம் போன்ற குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் கூட, குறைந்த வாக்கு விகிதம் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளது போன்ற மாற்றங்கள் நடந்துள்ளன. சாதி, மதம், பண பலம் மற்றும் பாரம்பரிய அரசியல் அமைப்புகளைக் கடந்து மக்கள் மாற்றத்தை விரும்பத் தொடங்கியுள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Source link