பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சி ஆபத்தானது – பாமக தலைவர் அன்புமணி – pmk leader anbumani condemns cm vijay for property registration and land surveying move privatise

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்க தமிழக வெற்றிக் கழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முயற்சி ஆபத்தானது எனவும் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என முதல்வர் விஜய் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்க தமிழக வெற்றிக் கழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முயற்சி ஆபத்தானது எனவும் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என முதல்வர் விஜய் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணி அறிக்கை

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இன்றியமையாதவையான பத்திரப் பதிவு, நில அளவை ஆகிய பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நில அளவையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வேலைக்கு அச்சுறுத்தலையும், பத்திரப்பதிவில் கூடுதல் செலவு மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஒரு தடையாக இருக்காது.

தமிழ்நாட்டில் இப்போது 56 பதிவு மாவட்டங்களில் மொத்தம் 595 பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில் தனியார் பதிவு மையங்கள் உருவாக்கப்படுவது தேவையற்றது. அரசு பதிவு அலுவலகங்களில் வழங்கப்படுவதை விட மேம்பட்ட வசதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மையங்கள் அமைக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பத்திரப் பதிவுக்காக வருவோருக்கு மேம்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதை பத்திரப் பதிவுத் துறையின் கீழ் இயங்கும் பத்திரப் பதிவு அலுவலங்களில் செய்து கொடுக்க முடியும். இதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது என தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

மக்களை சுரண்டும் செயல்

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் பதிவுத் துறை மிகவும் முக்கியமானது. பத்திரப் பதிவு மூலமாக மட்டுமே நடப்பாண்டில் இந்தத் துறைக்கு ரூ.35,109 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1% நிதியை செலவிட்டாலே அனைத்து பதிவு அலுவலகங்களிலும் குளிரூட்டி உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை செய்து தர முடியும். அந்தப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி, அதற்காக ரூ.10,630 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது பொதுமக்களை சுரண்டும் செயலாகும் என கடுமையாக விமர்சித்திள்ளார்.
தனியார் நிறுவனங்களால் அமைக்கப்படும் முன்மாதிரி பதிவு மையங்களில் பத்திரப் படிவுக்காக வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளையும், சேவைகளையும் மட்டும் தான் தனியார் நிறுவனங்கள் செய்யும் என்றும், பத்திரப் பதிவு மற்றும் அது சார்ந்த சட்டப்பூர்வ பணிகளை அரசு பதிவாளர்கள் தான் செய்வார்கள் என்பதால் இதை தனியார்மயமாக்கலாக கருத முடியாது என்றும் அதிகாரிகள் சார்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

தனியார்மயமாக்கல் ஒட்டகத்தைப் போன்றது

தனியார்மயமாக்கல் என்பது ஒட்டகத்தைப் போன்றது. அந்த ஒட்டகம் கூடாரத்திற்குள் மொத்தமாக நுழைந்து விடாது. முதலில் தலையை மட்டும் தான் நுழைக்கும். அதன்பின் படிப்படியாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்தக் கூடாரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். பதிவுத்துறையில் 5 முன்மாதிரி பதிவு மையங்களை அமைப்பதற்கு தனியாரை அனுமதிப்பதும் ஒட்டகத்தின் தலையை கூடாரத்திற்குள் நுழைக்க அனுமதிப்பதற்கு ஒப்பானது. வெகுவிரைவில் ஒட்டுமொத்த பதிவுத்துறையும் தனியார்மயமாக்கப்படுவதற்கே இது வழிவகுக்கும்.

நில அளவைப் பணிகளாக இருந்தாலும், பத்திரப் பதிவாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த இரு பணிகளும் தனியார்மயமாக்கப்பட்டால் ஊழல் மேலும் மேலும் அதிகரிப்பது மட்டுமின்றி, சரி செய்ய முடியாத அளவுக்கு முறைகேடுகளும் அதிகரிக்கும். எனவே, பத்திரப் பதிவு, நில அளவை ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக இரு துறைகளிலும் போதிய எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமித்து, அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி மக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source link