RCB – 7 வீரர்களை விடுவிக்கும் ஆர்சிபி அணி: 5 இடங்களுக்கு வீரர்களை வாங்கணும்: புள்ளி விபரம் இதோ – rcb team chance to release 7 players before ipl 2027 mini auction

ஐபிஎல் வரலாற்றில், தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வென்ற அணியாக இருக்கும், நடப்பு சாம்பியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஹாட்ரிக் கோப்பையை அடித்து வரலாறை படைக்கும் முனைப்பில், ஐபிஎல் 2027 சீசனுக்கு, தற்போது இருந்தே தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், அணிக்கு தேவையில்லாத சில வீரர்களை வெளியேற்றிவிட்டு, மாற்றாக தரமான வீரர்களை வாங்க முடிவு செய்துள்ளனர். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

7 வீரர்கள் விடுவிப்பு: ஆர்சிபி அணி, மொத்தம் 7 வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.

விக்கெட் கீப்பர் இடத்திற்கு பிலிப் சால்ட் இருப்பதால், ஜிதேஷ் சர்மாவை விடுவிக்க முடிவிக்க உள்ளனர். ஆல்ரவுண்டர் ரொமாரியோ செய்பர்ட் சேவை, ஆர்சிபிக்கு தேவைப்படவில்லை. டிம் டேவிட் அணியில் இருப்பதால், செய்பர்ட்டை வெளியேற்ற முடிவு செய்துள்ளார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்கள், அபிநந்தன் சிங், கணிஷ் சௌகான், பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் விஹான் மல்கோத்ரா, விக்கி ஒட்ஸ்வால், சாட்விக் தேஸ்வால் ஆகியோரையும் விடுவிக்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இவர்களை வெளியேற்றிவிட்டு, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அபாரமாக விளையாடும் வீரர்களை, அணிக்குள் கொண்டு வர ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் யாரை வாங்க வேண்டும்: ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் அல்லது ஏலத்தில், ஆர்சிபி அணி நிர்வாகம், 5 இடங்களுக்கான வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரை வாங்க வேண்டும். இது பேக்கப் ஆப்ஷன் என்பதால், இந்திய இளம் விக்கெட் கீப்பர் ஒருவரை வாங்க அதிக வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது. இதற்கு இந்தியர் அல்லது வெளிநாட்டு வீரரை வாங்கியாக வேண்டும். ஆர்சிபி அணி நிர்வாகம், செர்பர்ட்டிற்கு மாற்றாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை டார்கெட் செய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஒரு முழுநேர ஸ்பின்னரும் அணிக்கு தேவைப்படுகிறார். சுயாஷ் சர்மா மட்டுமே, முழுநேர ஸ்பின்னராக இருக்கிறார். இவருக்கு பேக்கப்பிற்காக, இளம் சுழற்பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது.

மேலும், டிம் டேவிட்டிற்கான பேக்கப் பினிஷர் வீரரும் ஆர்சிபி அணிக்கு தேவைப்படுகிறார். மேலும், புவனேஷ்வர் குமார், ஆயஷ் தயாள் ஆகியோருக்கு பேக்கப் வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறார்.

ஆர்சிபி அணிக் கேப்டன் ராஜத் படிதருக்கு, தற்போது 33 வயதாகிறது. இதனால், இவரை இன்னமும் 2 சீசன்கள் வரை மட்டுமே கேப்டனாக ஆட வைக்க வாய்ப்புள்ளது. ஆகையால், புதுக் கேப்டனையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம், இருக்கிறது. தற்போதைக்கு, தேவ்தத் படிக்கல்லைதான் அடுத்த கேப்டனாக ஆர்சிபி நிர்வாகம் பார்ப்பதாக கருதப்படுகிறது.

விராட் கோலிக்கு இருக்கும் பிட்சனஸிற்கு, அவர் இன்னமும் 3-4 வருடங்கள் வரை ஐபிஎலில் ஆட வாய்ப்புள்ளது. மேலும், கோலியாக ஓய்வு பெறும் வரை, அவரை ஆர்சிபி அணி நிர்வாகம் அணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை.

ஆர்சிபி அணியில் இருக்கும் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோரால், ஐபிஎல் 2028 சீசன் வரை மட்டுமே ஆட முடியும் என்பதால், இவர்களுக்கு மாற்றாக தரமான வீரர்களை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் இருக்கிறது.

Source link