அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட பனிப்புயலில், 4 வயதான பூடுல் – ஹஸ்கி கலப்பினத்தை சேர்ந்த ‘லுாலுா’ நாய் சிக்கியது. அதை அழைத்துச்சென்ற வீரர்கள் இருவரும், பனிப்புயலில் சிக்கி 500 அடி ஆழத்துக்கு துாக்கி வீசப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நாயை தேடும் பணி தொடங்கியது. மலையேற்ற வீரர்கள் 20 பேர், ஹெலிகாப்டர், ட்ரோன் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர்.
அந்த நாய், ஆப்பிள் ‘ஏர்டேக்’ அணிந்திருந்தது. அதில், நாய் இருக்கும் லோகேஷன் விவரம் கிடைத்தது. அதன் உதவியுடன் நடந்த 50 மணி நேர தேடுதல் முடிவில், ‘லுாலுா’ நாய் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார், உரிமையாளர் லாரென் ஜாய். ‘நாய் தானே’ என்று கருதாமல், தீவிர முயற்சி எடுத்து நாயை காப்பாற்றியவர்களை பாராட்டுகின்றனர், வலைதளவாசிகள்.
