பயங்கரவாத விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது; பாக் துணை பிரதமர் முன்னிலையில் சீறிய ராஜ்நாத் சிங்

நமது நிருபர்

தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் முன்னிலையில் பயங்கரவாதத்தை கடுமையாக சாடி பேசினார்.

அவர் பேசியதாவது: பயங்கரவாதம் அப்பாவி உயிர்களுக்கு மட்டுமல்ல. முதலீடு, வர்த்தகத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. பயங்கரவாத விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது. பயங்கரவாதம் சமூகங்களைத் தீவிரமயப்படுத்துவதோடு, நமது இளைஞர்களுக்கு அவர்கள் தகுதியான வாய்ப்புகளை மறுக்கிறது. பயங்கர வாதத்திற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து ஆதரவளிப்பவர்களுக்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடம் வழங்குபவர்களுக்கும் இடமிருக்கக்கூடாது. பயங்கரவாதம் ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த கூட்டத்தில்

உறுப்பு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Source link