மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் காக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் பேனா வடிவிலான கேமராக்கள் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த நாடாளுமன்றச் செயலகம் அதிரடித் தடை விதித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே சமயம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்கள் மற்றும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று (19.07.2026) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் அடங்கிய குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
