பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கும்பல்: அன்பில் மகேஷ் கைது குறித்து நிர்மல் குமார் காட்டம்

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.  இந்த வழக்கில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், அன்பில் மகேஷை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்: ஒரே ராத்திரியில் ரூ.13 கோடிக்கு அதிபதியான இந்தியர்; அடுத்த பிளான் இதுதான்

இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த கும்பகோணம் தீ விபத்து சம்பவத்தை யாரும் மறந்திருக்கமாட்டோம். அதன்பின், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார்கள். அந்த கட்டுப்பாடுகளை வைத்து பணம் பார்க்கும் ஒரு கேவலமான கும்பலை பார்த்திருக்கிறீர்களா? 

அந்த கட்டுப்பாடுகளை மீறி குழந்தைகளுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அன்பில் மகேஷ் மாதிரி ஒரு ஆளை போட்டு அதுக்கு கீழே ஒரு 10 புரோக்கர்களை போட்டு 300 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்து குழந்தைகளின் பாதுகாப்பில் பணம் பார்த்த ஒரு கேவலமான கும்பல் என்றால் அது ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தான். அவருக்கு பங்கு போகாமலா இருந்திருக்கும். உதயநிதியும் அன்பில் மகேஷும் கை கோர்த்து கொண்டு தான் நடந்தார்கள். 

ஒரு இடத்தில் இரண்டு இடத்தில் இல்லை 4,000 பள்ளிகளில் வசூல் செய்திருக்கிறீர்கள். ஓபனாக வைத்து தானே வியாபாரம் செய்திருக்கிறீர்கள். குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் சான்றிதழ் கொடுக்கிறோம் என்று டேபிள் போட்டு வசூல் செய்ததால் தான் மாட்டிக் கொண்டு நிற்கிறீர்கள். இப்படி ஒரு கேவலமான வேலையை செய்த ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும். தி.மு.க பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை” என்றார்.

Source link