தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்த சூழலில் கேக் தாயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் மதிப்பு, எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
நவம்பர் 14 குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் ஆலோசனை செய்து வந்தார். அதன்படி, அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 45 கிராம் எடையுள்ள Mixed Fruit, Classic Vanilla, Rich Chocolate ஆகிய மூன்று பிளேவர்களில் மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் – முதல்வர் விஜய் நடவடிக்கை
கேக் பொதுவான முட்டை சேர்த்து செய்யப்படும் என்பதால் சைவ உணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு மோர் அல்லது பால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டலாம் எனவும் கூறப்படுகிறது. மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி, குறைந்தது அடுத்த 30 நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும் வகையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்படவுள்ளது. தற்போது ரூபாய் 7.54 கோடியில் 62.46 லட்சம் கேக் துண்டுகள் வழங்க 4 நிறுவனங்களுக்கு AOC (Award of Contract) வழங்கப்பட்டுள்ளது.
AOC வழங்கப்பட்ட நிறுவனங்கள்
Elite Natural Dream Bake Britannia ITC
ரூபாய் 7.54 கோடி மதிப்பில் 62.46 லட்சம் கேக்
L1 – Elite Natural நிறுவனம் ஒரு கிராமுக்கு ரூபாய். 0.24 என்ற விலையில், 10,06,861 கேக் துண்டுகள் தயாரிக்க உள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 1.14 கோடி ஆகும். L1 – விலையை ஏற்றுக்கொண்ட Dream Bakeநிறுவனம் ஒரு கிராமுக்கு ரூபாய். 0.24 என்ற விலையில், 33,87,459 கேக் துண்டுகள் தயாரிக்க உள்ளது. இதன் மதிப்பு ரூபாய். 3.84 கோடி ஆகும். L2 – Britannia நிறுவனம் ஒரு கிராமுக்கு ரூபாய். 0.27 என்ற விலையில், 10,03,996 கேக் துண்டுகள் – ₹1.28 கோடி ஆகும். L3 – ITCநிறுவனம் ஒரு கிராமுக்கு ரூபாய். 0.28 என்ற விலையில், 8,48,096 கேக் துண்டுகள் தயாரிக்க உள்ளது. இதன் மதிப்பு ரூபாய். 1.08 கோடி ஆகும்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
Source link
