பழனி கோயில் நில மோசடி வழக்கு: ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபி-சிஐடி விசாரணை – அடுத்து என்ன? – palani temple land scam case cb-cid interrogates justin manikandan

பொறுப்பு சார்பதிவாளராக வந்து கையெழுத்திட்டவர் ஜஸ்டின் மணிகண்டன் என புகார் எழுந்த நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பழனி கோவில் நில மோசடி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு 1888 ஆம் ஆண்டு பக்தர் குப்புசாமி மணியக்காரர் என்பவர், சுமார் 1.40 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். இந்த நிலம் தற்பொழுது பழனி தண்டாயுதபாணி கோவிலில் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.சில தனிநபர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் சார்பு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,மடத்தின் சொத்துகளை பாதுகாக்கும் வகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் இணை ஆணையரை மடத்தின் தக்காராக நியமித்து உத்தரவிட்டது.இந்த நிலையில்,வெள்ளதுரை என்பவர் 100 கோடி மதிப்பிலான இடத்தை இரண்டு கோடிக்கு சேதுபதி என்பவருக்கு விற்பனை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஜூலை 6 ஆம் விவகாரத்தில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி அறநிலையத்துறை அதிகாரி முருகானந்தம் அளித்தார். இந்த புகாரின் பெயரில் தான் இந்த விவகாரம் பொதுவெளியில் பூதாகரமாக வெடித்தது.

ரூ.100 கோடி கோவில் நிலம் 2 கோடிக்கு விற்பனை

பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச. முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிர்வாகியாகக் கூறப்படும் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஜூலை 15, 2026 அன்று இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ள நிலையில், தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் சாஜிதா நேரில் பழனிக்கு வந்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.மேலும், கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, 1880-ஆம் ஆண்டு முதல் உள்ள முக்கிய ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை

அதேபோல், சம்பந்தப்பட்ட நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு தொடர்பான ஆவணங்களையும் வருவாய்த் துறை அதிகாரிகள் சிபிசிஐடி குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு மின்வாரியத்திற்கும் சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியது.

மின்வாரியத்திடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் தற்போது திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில், அவர் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகளின் விசாரணைக்கு பதிலளித்தார்.இந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளராக வந்து கையெழுத்திட்டவர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link