பழனி கோயில் நில மோசடி விவகாரம்: த.வெ.க-விற்கு ஷாக் கொடுத்த அ.தி.மு.க; அதிர்ச்சியில் அமைச்சர் ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை கடந்த ஜூலை 6-ம் தேதி ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக இரு தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடாக பதிவு செய்து கொடுத்ததாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பெரம்பூருக்கு குட் நியூஸ்… சென்னை டூ அரக்கோணம் ரூட்டுக்கு க்ரீன் சிக்னல்

சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக பழனி கோயில் இணை ஆணையர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி..ஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால் தரப்பில் மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. 

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால் தரப்பில் அவரது வழக்கறிஞர் மாரிஸ் குமார், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக இன்று ஆஜரானர். அப்போது அவர், “பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரத் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு பதிவாளரைக் கொண்டு, பத்திரப் பதிவு செய்தது, உடனடியாக புகார் அளிக்காதது, நிலத்தின் மதிப்பை குறைவாக மதிப்பீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு விசாரிக்கப்பட வேண்டிய விசயங்கள் இந்த வழக்கில் உள்ளன. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், கோரிக்கைகள் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக கூறினர். 

Source link