பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு – 4 பேரை கைது செய்த சிபிசிஐடி

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தின் மோசடி வழக்கில் நான்கு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

பழனி தண்டாயுதபானி கோவில் நில மோசடி:

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 1980ஆம் ஆண்டில் நில உரிமையாளர் குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தார்கள், சிபிசிஐடி அலுவலகத்தில் மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்ற விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 பேர் கைது:

பழனி கவுண்டன்குளம் ஏ.சி.சி சாலை பகுதியை சேர்ந்த அன்வர்தீன், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை, விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜர் நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகதாஸ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு பதிவு:

இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், பழனி டி.கே.என் புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Source link