சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை வைத்து ஆலோசனை செய்வது போன்ற பணிகளில் முதல்வர் ஜோசப் விஜய் ஈடுபடுவதில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதற்கு அடையாளமாகத்தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறுமிகள் காணாமல் போவதும், கொலைகள் நடப்பதும், சிறைச்சாலையிலிருந்து கைதிகள் ஒட்டுமொத்தமாக தப்பி ஓடுவதும் தவெக அரசின் இயலாமையையே காட்டுவதாக கூறினார்.
அன்பில் மகேஷ் கைதில் உள்நோக்கம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியாது என்றார். அன்பில் மகேஷை இந்த அளவிற்கு வேகமாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பது என்பது தேவையில்லாதது. அன்பில் மகேஷ் கைதில் உள்நோக்கம் இருப்பதாக கருத வேண்டியுள்ளதாக கூறினார்.
இன்னும் பல பைல்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ள கருத்திற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, இன்றைக்கு இவர்கள் பைல்களை ஓபன் செய்யலாம், அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் இவர்களது பல பைல்களை ஓபன் செய்வார்கள். பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் நியாயமான நடவடிக்கை எடுத்தால் பாராட்டத்தக்கது. பழிவாங்கும் எண்ணத்தோடு அதிமுக, திமுகவை அழித்து விடலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்றார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களே காரணம்
திராவிட இயக்கங்கள் பழம்பெரும் கட்சிகள், பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சமுதாயத்திற்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் போராடிய கட்சிகள். திராவிட இயக்க வரலாற்றால் தான் தமிழகம் முன்னணி மாநிலமாக இந்திய அளவில் உயர்ந்திருக்கிறது என்றார். தமிழகத்தில் இன்றைக்கு சாலைகளும், பாலங்களும், பள்ளிக் கூடங்களும் இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே காரணம். இதனைத் தவிடு பொடியாக்க தவெக அரசு நினைத்தால் அது நடக்காது என்றார்.
தனுஷ் கட்சி தொடங்குகிறார் என்பது உறுதி
தனுஷ் பாஜகவில் இணைகிறாரா? இல்லையா? என்பது தெரியாது ஆனால் உறுதியாக கட்சி ஆரம்பிக்கிறார். தனுஷ் கட்சி துவங்கும் தகவல்கள் அவரது நண்பர்கள் மூலமாக எனக்குத் தெரிய வந்துள்ளது. நடிகர் தனுஷ் பாஜகவின் “டி” டீம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, பதிலளித்த ராஜேந்திர பாலாஜி அப்படியென்றால் பாஜகவின் முதல் டீம் தவெக- வா? என கேள்வி எழுப்பினார்.
தனுஷின் வருகையால் தவெக அரசுக்கு சிக்கல்
மொத்தத்தில் நடிகர் தனுஷின் வருகை தவெக அரசுக்கு சிக்கலும்- சிரமமும் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிகூறினார். தவெக அமைச்சர்களும், நிர்வாகிகளும் மனதளவில் பாதிக்கப்பட்டதன் வெளிப்பாடுதான் அவர்களது இன்றைய பேச்சுக்கள் உள்ளது. தவெக விபத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. அதேபோல் விபத்தில் வேறு யாரும் ஆட்சிக்கு நுழைந்து விடுவார்கள் என்ற பயம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கத்தான் செய்யும். தனுஷைக்கண்டு தவெக பயந்துள்ளதால் தான் அவரைப்பற்றி பேசுகிறார்கள். பயமில்லை என்றால் அவரைப் பற்றி பேசாமல் விட்டு விட வேண்டியது தானே என்றார்.
வரும் காலத்தில் அரசியலில் நிச்சயமாக ஒரு மாற்றமும், தவெக அரசிற்கு ஏமாற்றமும் ஏற்படும் என ராஜேந்திர
