தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் நாளை முதல் ஆவின் பொருட்களின் விலை உயரவுள்ளது.
தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் நாளை முதல் ஆவின் பொருட்களின் விலை உயர உள்ளது.
பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள்
மேலும் தனியார் பால்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது, அரிசி, பருப்பு மற்றும் சமையலுக்குத் தேவையான எண்ணெய் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தினந்தோறும் ஏதாவது ஒரு பொருளின் விலை உயர்ந்து வருவதாகவும், இதனால் தினக்கூலி வைத்து வாழ்க்கை மற்றும் குடும்பத்தை நடத்தும் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அமைச்சர் மரியா வில்சன் விளக்கம்
இதுகுறித்து அமைச்சர் மரியா பேசி விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இல்லாததன் தாக்கம், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் நடந்து வரும் போர் இதெல்லாம்தான் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்குக் காரணிகளாக உள்ளன என அவர் தெரிவித்தார்.
தவெக அரசு நடவடிக்கை
அரிசியின் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் ரூபாய் 30க்கு சன்னரக அரிசியை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து, வழங்கி வந்தது. ஆனால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் நியாயவிலைக் கடைகளில் அரிசி கிடைப்பதில்லை எனவும், தட்டுப்பாடு நிலவுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில் ஆவின் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென உயர்ந்த ஆவின் பொருட்களின் விலை
ஒரு புறம் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்ற மலிவு விலையில் அரிசிகள் வழங்கிய அதே நேரத்தில், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது, பல்வேறு விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உட்பட்டு வருகிறது. அடுத்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி செலவுகள்- சிக்கித் தவிக்கும் மக்கள்
அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சூழலில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் நடுத்தர மக்களின் குடும்பங்களில் செலவுகள் என்பது அதிகரிக்கும். பலர் கடன் வாங்கி இது போன்ற பண்டிகையைக் கொண்டாடும் நிலைமையும் ஏற்படும்.
இந்த இக்கட்டான நிலையில் தமிழக அரசு ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது, அவர்களது செலவுகளை அதிகரித்து, வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் படி உள்ளது என கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தில் உயர்த்தியதை அரசு லாப நோக்கத்துடன் செயல்படுவதா என விமர்சித்த எடப்பாடி, வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் கொண்ட 5 மாநிலங்கள்
சமீபத்தில் இந்திய அளவில் உணவுப் பொருட்கள் மற்றும் பணவீக்கம் கொண்ட மாநிலங்களின் பட்டியல் வெளியானது. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றது. இதனைக் குறிப்பிட்டு தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். 10.62 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் 10.18 சதவீதத்துடன் ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடம் 9.58 சதவீதத்துடன் ஒடிசா மூன்றாம் இடம் 9 சதவீதத்துடன் கர்நாடகம் நான்காம் இடம் 8.91 சதவீதத்துடன் மகாராஷ்டிரா ஐந்தாம் இடம்
Source link
