பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்: சட்டப் போராட்டத்தில் வெற்றி- சீமான் – ntk seeman criticized the tvk government calling bjp-modi government over the arrest of ntk karthika

தாராபுரத்தில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு விசாரணை நடைபெற்றதில், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில் அவர்களது விடுதலைக்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தவெகவை பாஜக மாடல் அரசு என விமர்சித்தும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தாராபுரத்தில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த விகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது வழக்கு விசாரணை நடைபெற்றதில், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில் அவர்களது விடுதலைக்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தவெகவை பாஜக மாடல் அரசு என விமர்சித்தும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான் அறிக்கை

தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நீதியின் மீது நம்பிக்கை

இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மாடல் தவெக

பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் என தெரிவித்த அவர், தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும் என குறிப்பிட்டு அந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Source link