பாட்டீஸ் ரெடியா? ரிட்டையர் ஆனா இந்தியால இருக்க பிடிக்கலயா? திரும்பி பாக்காம இந்த நாட்டுக்கு ஓடிருங்க

2026 -ஆம் ஆண்டில் ஓய்வு பெறப் போகிறவர்களுக்காக  ‘இன்டர்நேஷனல் லிவிங்’ நிறுவனம் தனது 35-வது வருடாந்திர குளோபல் ரிட்டயர்மென்ட் குறியீட்டை (Annual Global Retirement Index) வெளியிட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழல், குறைந்த வாழ்க்கைச் செலவு, சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் நல்ல உள்கட்டமைப்பு ஆகியவற்றை விரும்பும் முதியவர்களுக்கான உலகின் மிகச்சிறந்த இடங்களை இந்த பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் வெயில் கொளுத்துகிறது… இன்னொரு பக்கம் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எகிறுது; ஐரோப்பால என்ன தான் நடக்குது?

வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதி, மருத்துவம், விசா மற்றும் குடியுரிமை விதிமுறைகள், காலநிலை, அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை தரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் உலக நாடுகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

கிரீஸ் 

இந்த பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது கிரீஸ் நாடு. பாதுகாப்பு, உயர்தர வாழ்க்கை, இயற்கை அழகு மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிகளைத் தேடும் முதியவர்களை இந்த நாடு பெரிதும் கவர்ந்துள்ளது. இங்குள்ள இதமான மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் சிக்கனமான வாழ்க்கை முறைக்காகவே ஓய்வு பெற்றவர்கள் கிரீஸை விரும்புகிறார்கள். உலகப் புகழ்பெற்ற சாண்டோரினி (Santorini) மற்றும் கிரீட் (Crete) போன்ற இடங்களைத் தாண்டி, மிகக் குறைந்த செலவில் அமைதியான வாழ்க்கையைத் தரும் பல அழகான சிறிய நகரங்களும் இங்கு உள்ளன.  

பனாமா 

இரண்டாவது இடத்தில் இருப்பது நீண்டகாலமாகவே ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கமாக கருதப்படும் பனாமா நாடாகும். இந்த ஆண்டும், அங்குள்ள புகழ்பெற்ற ‘பென்ஷனாடோ திட்டம்’ (Pensionado program) மற்றும் நவீன உள்கட்டமைப்பு காரணமாக முதியவர்களை இந்த நாடு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இங்கு செட்டில் ஆகும் முதியவர்களுக்கு வரி சலுகைகள், பல்வேறு சேவைகளில் தள்ளுபடிகள் மற்றும் தரமான மருத்துவ வசதிகள் எளிதாகக் கிடைக்கின்றன. 

கோஸ்டாரிகா 

இயற்கை ஆர்வலர்களுக்கும், அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கும் கோஸ்டாரிகா ஒரு கனவு தேசமாகும். இந்த நாட்டின் புகழ்பெற்ற “புரா விடா” (அதாவது தூய்மையான வாழ்க்கை) என்ற தத்துவம், அசாத்திய பல்லுயிர் பெருக்கம் மற்றும் சிறந்த சுகாதார அமைப்பு ஆகியவை உலகெங்கிலும் உள்ள முதியவர்களை ஈர்க்கிறது. இங்குள்ள கடற்கரை கிராமங்களும், மலைப் பிரதேச நகரங்களும் வருடம் முழுவதும் இதமான காலநிலையுடன் கூடிய நிம்மதியான வாழ்க்கையை வழங்குகின்றன.  

போர்ச்சுகல் 

வாழ்க்கைச் செலவுகள் சற்றே அதிகரித்து வந்தபோதிலும், போர்ச்சுகல் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து உலக மக்களை கவர்ந்து வருகிறது. பாதுகாப்பான நகரங்கள், மிகச்சிறந்த பொதுப் போக்குவரத்து, தரமான மருத்துவம் மற்றும் அன்பான மக்கள் வாழும் சமூகத்திற்கு இந்த நாடு பெயர் பெற்றது. குறிப்பாக லிஸ்பன் (Lisbon) மற்றும் போர்ட்டோ (Porto) போன்ற நகரங்கள் தங்களின் அழகான கடற்கரைகள் மற்றும் கோல்ஃப் மைதானங்களுக்காக மிகவும் பிரபலமானவை. இந்த பட்டியலில் மெக்சிகோ, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

Source link