பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கும் ஜெர்மன் பொறியாளர் பெயர் ஏன்?

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – பாம்பன் இடையே கடலில், 1914ல் ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்தனர். இப்பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்ட துாக்கு பாலம், ராமேஸ்வரம் தீவின் அடையாளமானது.

இந்த பாலத்தை, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த ஜெர்மன் பொறியாளர் ஜெர்சர் வடிவமைத்ததால், அவரது பெயரை சூட்டினர். அந்த பெயரே தற்போது வரை உள்ளது. இதற்கிடையே, புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு, 2025 ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்தின் நடுவில் செங்குத்தாக இயங்கும் வகையில் மும்பை ஐ.ஐ.டி., மற்றும் ரயில்வே கட்டுமான பிரிவு பொறியாளர்கள் கைவண்ணத்தில், லிப்ட் போன்ற அமைப்பில் செங்குத்து துாக்கு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய துாக்கு பாலத்திற்கும், பழைய பாலத்தை வடிவமைத்த ஜெர்சர் பெயரை சூட்டி, துாக்கு பாலம் அருகில் உள்ள கட்டடத்தில் பெயர் பலகையையும் ரயில்வே நிர்வாகம் வைத்துள்ளது. பிரதமர் மோடி முயற்சியில், 531 கோடி ரூபாயில், நம் நாட்டு பொறியாளர்களால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய பாலத்திற்கு ஜெர்சர் பெயரை சூட்டியதற்கு, சேவா பாரதி அமைப்பின் சுடலை உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link