பாரா குண்டு எறிதலில் தங்கம் வென்று ஷர்மிளா தன்கர் சாதனை; உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரேவுக்கு வெள்ளி!

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 5-வது நாளான நேற்று மகளிருக்​கான பாரா குண்டு எறிதலில் எஃப் 57 பிரி​வில் இந்​தி​யா​வின் ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றார். இதன் மூலம் காமன்​வெல் விளை​யாட்​டில் தங்​கம் வென்ற முதல் இந்​திய பாரா வீராங்​கனை என்ற சாதனையை படைத்​துள்​ளார் ஷர்​மிளா தன்கர்.

அவரது இந்த வெற்​றி, காமன்​வெல்த் போட்​டிகளில் பாரா தடகளத்தில் பதக்​கம் வெல்​வதற்​கான இந்​தி​யா​வின் 20 ஆண்டுகால காத்​திருப்​புக்கு முடிவு கட்​டியது. இதற்கு முன்​னர், 2006-ம் ஆண்டு நடை​பெற்ற போட்​டி​யில் ஆடவருக்​கான வட்டு எறிதலில் ரஞ்​சித் குமார் ஜெயசீலன் வென்ற பதக்​கமே காமன்வெல்த் பாரா தடகளத்​தில் இந்​தி​யா​வின் கடைசி பதக்கமாக இருந்தது.

எஃப் 57 பிரி​வில் இந்​தி​யா​வின் ஷில்பா ஷைலா 7.26 மீட்​டர் தூரம் எறிந்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். முதலில் நைஜீரி​யா​வின் யூகேரியா இயாசி வெண்​கலப் பதக்​கம் வென்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. ஷில்பா ஷைலா 4-வது இடம் பிடித்​த​தாகவே கூறப்​பட்​டது. ஆனால், யூகேரியா இயாசிஃபவுல் செய்​த​தாக இந்​திய தரப்​பில் எதிர்ப்பு தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து ஆய்​வுக்கு பின்​னர் யூகேரியா இயாசி எறிந்த ஒரே செல்​லுபடி​யாகும் தூர​மும் ஃபவுல் என நடு​வர்​களால் தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. இதன் பின்​னரே ஷில்பா ஷைலா​வுக்கு வெண்​கலப் பதக்​கம் வழங்​கப்​பட்​டது.

சர்​வேஷ் குஷாரே

ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தலில் இந்​தி​யா​வின் சர்​வேஷ் குஷாரே 2.25 மீட்​டர் உயரம் தாண்டு வெள்​ளிப் பதக்​கம் வென்று சாதனை படைத்​தார். காமன்​வெல்த் விளை​யாட்டு வரலாற்​றில் இந்​திய வீரர், உயரம் தாண்​டு​தலில் வெள்​ளிப் பதக்​கம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும். எனினும் தங்​கப் பதக்​கம் வெல்​லும் வாய்ப்பை சர்​வேஷ் குஷாரே நூலிழை​யில் தவற​விட்​டார். ஜமைக்​கா​வின் ரொமைன் பெக்ஃ​போர்டு தங்​கப் பதக்​கம் வென்​றார்.

2.25 மீட்​டர் உயரத்தை லாவக​மாகத் தாண்​டிய பிறகு, 31 வயதாகும் சர்​வேஷ் குஷாரே மற்​றும் பெக்ஃ​போர்ட் ஆகிய இரு​வரும் 2.28 மீட்​டர் உயரத்​தைத் தாண்​டத் தவறினர். ஆனால், இந்​திய வீரரை விட ‘கவுண்ட்​-பேக்’ முறை​யில் ஒரு முறை மட்​டுமே குறை​வாகத் தவறு செய்​திருந்​த​தால், ஜமைக்​கா​வின் ரொமைன் பெக்ஃ​போர்ட் தங்​கப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். இங்​கிலாந்​தின் ஜேக் கிமானி 2.20 மீட்​டர் உயரம் தாண்டி வெண்​கலப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார்.

கடைசி​யாக 2022-ம் ஆண்டு பர்​மிங்​ஹாமில் நடை​பெற்ற காமன்​வெல்த் விளை​யாட்​டில் இந்​தி​யா​வின் தேஜஸ்​வின் சங்​கர் உயரம் தாண்​டு​தலில் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​யிருந்​தார்.

பளுதூக்​குதல்

ஆடவருக்​கான பளுதூக்​குதலில் 79 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் வல்​லூரி அஜய பாபு 330 கிலோ எடையை (ஸ்​னாட்ச் 149 + கிளீன் அன்ட் ஜெர்க் 181) தூக்கி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். 21 வயதாகும் ஆந்​திர மாநிலம் விஜயநகரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த வல்​லூரி அஜய பாபு ஒரு கிலோ எடை வித்​தி​யாத்​தில் தங்​கப் பதக்​கம் வெல்​லும் வாய்ப்பை தவற​விட்​டார்.

நடப்பு தொடரில் பளுதூக்​குதலில் இந்​தியா வெல்​லும் 6-வது பதக்​கம் இது​வாகும். மலேசி​யா​வின் எரி ஹிதா​யத் முஹம்​மது 331 கிலோ எடையை (ஸ்​னாட்ச் 147 + கிளீன் அன்ட் ஜெர்க் 184) தூக்கி தங்​கப் பதக்​கம் வென்​றார். இங்​கிலாந்​தின் கிறிஸ் முர்ரே 325 கிலோ எடையைத் தூக்கி வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்.

குத்​துச்​சண்டை

மகளிருக்​கான குத்​துச்​சண்​டை​யில் 51 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் சாக் ஷி சவுத்ரி 5-0 என்ற கணக்​கில் போட்ஸ்​வா​னா​வின் லெதாபோ மோடு​க​னேலேவை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஆடவருக்​கான 70 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் சுமித் 1-4 என்ற கணக்​கில் வடக்கு அயர்​லாந்​தின் ஜான் மெக்​கோனலிடம் தோல்வி அடைந்​தார்.

ஆடவருக்​கான 110 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தின் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தேஜஸ் ஷிர்சே பந்தய தூரத்தை 15.39 வினாடிகளில் நிறைவு செய்து கடைசி இடத்தை பிடித்​தார். இறு​திப் போட்​டிக்கு முன்​ன​தாக தேஜஸ் ஷிர்​சேவுக்கு இடது காலில் காயம் ஏற்​பட்​டிருந்​தது. இதனால் அவரால் முழு பலத்​துடன் செயல்பட முடி​யாமல் போனது.

தேஜஸ் ஷிர்சே கூறும்​போது,“இறு​திப் போட்​டிக்கு ஆயத்​த​மாகி கொண்​டிருந்த போது இடது காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. எனினும் போட்​டி​யில் இருந்து விலக விரும்​ப​வில்​லை, அதனால் என் பிசி​யோதெரபிஸ்ட் ஆலோ​சனை​யின் படி காயம் ஏற்​பட்ட இடத்தை துணி​யால் இறுகக் கட்​டிக்​கொண்டு ஓடினேன்.

காமன்​வெல்த் விளை​யாட்​டில் 110 மீட்​டர் தடை​தாண்​டும் ஓட்​டத்​தின் இறு​திப்​போட்​டிக்​குத் தகு​திபெற்ற முதல் இந்​தி​யர் நான் தான். அதனால் போட்​டி​யில் இருந்து விலகி ஒட்​டுமொத்த தேசத்​தை​யும் ஏமாற்ற விரும்​பாத​தால் காயத்​துடன் பங்​கேற்​றேன்” என்றார்.

நீச்​சல்

நீச்​சலில் ஆடவருக்​கான 200 மீட்​டர் பட்​டர்​பிளை பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் சஜன் பிர​காஷ் பந்தய தூரத்தை 1:58.05 வி​நாடிகளில் கடந்து 8-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். அதேவேளை​யில் 800 மீட்​டர் பட்​டர்​பிளை பிரி​வில்​ இந்​தி​யா​வின்​ ஆர்யன் நெஹ்ரா இலக்கை 8:07.26 விநாடிகளில் அடைந்து 8-வது இடம் பிடித்தார்.

பாரா நீச்​சல்

நீச்​சலில் ஆடவருக்​கான 100 மீட்​டர் பேக்​ஸ்​டிரோக்​கில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பந்தய தூரத்தை 55.58 வினாடிகளில் கடந்து ஒட்​டுமொத்​த​மாக 14-வது இடத்தை பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறி​னார். 50 மீட்​டர் பட்​டர்​பிளை பிரிவு தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் சஜன் பிர​காஷ் பந்தய தூரத்தை 24.94 வினாடிகளில் கடந்து ஒட்​டுமொத்​த​மாக 28-வது இடத்தை பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

பாரா நீச்​சலில் ஆடவருக்​கான 50 மீட்​டர் ஃப்​ரீஸ்​டைல் பிரி​வில் இந்​தி​யா​வின் புதி​கினா பந்தய தூரத்தை 26.33 வினாடிகளில் கடந்து ஒட்​டுமொத்​த​மாக 6-வது இடமும் அலி இமாம் (28.41 வினாடிகள்) 8-வது இடமும் பிடித்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறினர்​.

அரை இறு​தி​யில் விஷால்

ஆடவருக்​கான 400 மீட்​டர் ஓட்​டத்​தில் ஹீட் 6-ல் இந்​திய வீரர் விஷால் தென்​னரசு கயல்​விழி பந்தய தூரத்தை 46.49 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறி​னார். 22 வயதாகும் விஷால் தென்​னரசு கயல்​விழி தமிழகத்தை சேர்ந்​தவர்.

ஒட்​டுமொத்​த​மாக, விஷாலின் 46.49 வினாடிகள் நேர​மானது, அரை இறு​திக்​குத் தகு​திபெற்ற 16 வீரர்​களில் 14-வது நேர​மாகப் பதிவானது. அரை இறுதி நாளை (30-ம் தேதி) நடை​பெறுகிறது. ஹீட் 3-ல் இடம் பெற்​றிருந்த மற்​றொரு தமிழக வீர​ரான ராஜேஷ் ரமேஷ் பந்தய தூரத்தை 47.43 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறும் வாய்ப்​பை இழந்​தார்​.

Source link