சென்னை: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 24) எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்., – சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணியின் தொடர் அமளியால் எந்த அலுவல்களும் நடக்கவில்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என, அக்கூட்டணி வலியுறுத்தி வருகிறது. கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 24) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
ராஜ்யசபா
அதேபோல் ராஜ்யசபாவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
