பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; பிரதமர் மோடி பேட்டி

புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக மிக பயனுள்ளதாக இருக்க வேண்டும் என எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதைய பார்லிமென்ட் கூட்டத்தொடர் முக்கியம். கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். பருவமழையும், மழைக்கால கூட்டத்தொடரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மிகப்பெரிய பெருமை

விக்ரம்1 திட்டம் வெற்றி வரலாற்று சாதனை. இந்த திட்டம் வெற்றி இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமை. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் சாதனைகள் படைத்து வருகின்றன. விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை எல்லாம் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பதை பிரதிபலிக்கிறது.

சவால்கள்

விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். உலகிலேயே சக்தவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள சவால்களை இந்தியா திறம்பட சமாளித்தது. இந்த போர் இந்தய வளர்ச்சியை தடுக்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source link