இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி (09.08.2025) மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸுக்குத் தனியாக நாற்காலி ஒன்று ஒதுக்கப்பட்டது. இருப்பினும் ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அந்த நாற்காலி காலியாவே இருந்தது. இதனையடுத்து இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மேலும் ஓராண்டுக்குத் தொடர்வார். அதன்படி அடுத்த ஆண்டு (அதாவது 2026) ஆகஸ்ட் மாதம் வரை பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது.
அதே போன்று கட்சியின் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் ஓர் ஆண்டுக்கு அப்பதவியில் தொடர்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் வரும் 29 ஆம் தேதி (29.07.2025 – புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் நடைபெறும் என அன்புமணி இராமதாஸும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
