பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கியது. கனடா, மெக்சிகோ, அமெரிக்க ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய இந்த உலககோப்பை தொடரில், மொத்தம் 48 அணிகள் பங்கேற்றிருந்தன. 6 அணிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் ரவுண்ட் 32 என்ற நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஜூன் 29 முதல் ஜூலை 4-வரை நடைபெற்ற ரவுண்ட் 32 நாக்அவுட் சுற்றின் முடிவில், 16 அணிகள் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஜூலை 8-ந் தேதி முடிவுக்கு வந்த ரவுண்ட் 16 சுற்றின் முடிவில், மொராக்கோ, ப்ரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, சுவிச்சர்லாந்து ஆகிய 8 அணிகள், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் 16 சுற்றில் 1-0 எ்னற கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறினது.
அரையிறுதி சுற்றில் மொராக்கோவை வீழ்த்திய ப்ரான்ஸ், பெல்ஜியம் அணியை வீழ்த்திய ப்ரான்ஸ், நார்வே அணியை வீழ்த்திய இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணியை வீழ்திய நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் ப்ரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா இங்கிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது,
இதனிடையே இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா – ஸ்பெயின் அணிகள் மோதியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடிய நிலையில், கோல் வாய்ப்புகள் அனைத்தும் முறியடிக்கப்பட்து. முதல் அரைமணி நேரம் இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில், 90 நிமிடங்கள் முழுமையாக ஆட்டம் முடிந்தும் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இறுதியாக வெற்றியை உறுதி செய்ய கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது.
இதில் 106வது நிமிடத்தில், பெர்ரன் டோரஸ் கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலை பெற வைத்தார். 90 நிமிடத்திற்கு மேல், அர்டிஜண்டினா அணியின் என்சோ ஃபெர்ணாண்டோஸ் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 106 நிமிடத்திற்கு பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி பிஃபா உலககோப்பை தொடரை வென்றது. நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது.
பிஃபா உலககோப்பை தொடரில் இதற்கு முன்னதாக ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இப்போதும் சாம்பியன் ஆகியுள்ளது. அதே சமயம், இதற்கு முன்னதாக 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணி 3 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், 7-வது முறையாக விளையாடிய இந்த இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது,
இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரரான ஸ்பெயின் அணியின் ரோட்ரி, அதிக கோல் அடித்த வீரருக்கான விருது பிரான்ஸ் அணியின் எம்பாப்வே, (10 கோல்) சிறந்த இளம் வீரருக்கான விருது ஸ்பெயின் அணியின் பவு சுபாரிசு, சிறந்த கோல் கீப்பராக ஸ்பெயின் அணியின் உனய் சைமன், சிறந்த அணியாக நெதர்லந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
