சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக் கு, 10 கோடி ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்க, தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு பிணையில்லா கடன் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ‘டான்ஸ்டியா’ தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் வங்கிகளில் சிறு, குறுந்தொழில்களுக்கு, 10 கோடி ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கவே இதை அரசு அறிவித்தது. ஆனால், வங்கிகள் பிணையில்லாமல் கடன் தருவதில்லை.
கடன் வழங்குவதற்கு, மொத்த கடன் தொகையில், பாதி தொகைக்கு இணையான மதிப்பிற்கு சொத்து ஆவணம், தங்க நகை போன்றவற்றை பிணையாக வாங்கி கொள்கின்றன. இதனால், பிணையில்லா கடன் வழங்கும் திட்டம் நீர்த்து போகிறது.
இந் த விவகாரம், ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து, வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு விட்டது.
கடன் வ ழங்குவது வங்கிகளின் சொந்த முடிவு என அதில் தெரிவித்துள்ளது.
புதிதாக தொழில் தொடங்குவோருக்கு யார் பிணை தருவர், எங்கிருந்து, ‘சிபில் ஸ்கோர்’ கிடைக்கும், பொதுத்துறை வங்கிகளே கடன் தர மறுத்தால், தனியார் துறை வங்கிகள் எப்படி கடன் வழங்கும்? எனவே கடன் வழங்குவதில் வெளிப்படை தன்மை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.10 கோடி வரை சிறுதொழிலுக்கு பிணையின்றி கடன் வழங்கப்படும் என அறிவிப்பு கடன் வழங்குவது வங்கிகளின் சொந்த முடிவு என்று அரசு கூறுவதால் சிக்கல்
