நமது டில்லி நிருபர்
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய போராட்டங்களை பாஜ நடத்த வாய்ப்புள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது, போலீசார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுவீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர். இதனால், தலைநகர் டில்லியில் நேற்றும் பதற்றமான சூழல் உருவானது.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடந்து வரும் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் எம்.பி.யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட சம்பவம் பாஜ தலைமை வரை கடும் கோபத்தை கிளப்பி உள்ளது.
ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய போராட்டங்களையும், பேரணிகளையும் பாஜ நடத்த வாய்ப்புள்ளது.
