மும்பை: மாணவர்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது பிரதமர் மோடி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புகிறேன் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சல்மான் கான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: கல்வி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் மாணவர்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் கவலைப்பட தேவையில்லை. பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே மாணவர்கள் தயவு செய்து பெற்றோரிடமும், வீடுகளுக்கும் திரும்ப வேண்டும்.
சகோதரர் சோனம் வாங்சுக்,உண்ணாவிரதத்தை தொடர வேண்டாம். தேவைப்பட்டால் இதனை மற்றொரு நாள் வைத்துக் கொள்ளலாம். ஏதாவது உணவு சாப்பிடுங்கள். தேவைப்பட்டால் எனதுவீட்டில் இருந்து அனுப்புகிறேன். இவ்வாறு அந்தப்பதிவில் சல்மான் கான்கூறியுள்ளார்.
