பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்கிற கே.தாமோதரன் (72), இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சமையல் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து செஃப் தாமு, கடந்த 2010ஆம் ஆண்டில் 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சமையல் கலையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இதனிடையே பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இவர், நடுவராக பங்கேற்று தமிழக மக்களிடம் அதிகளவில் பிரபலமானார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (25-10-26) காலை காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு சமையல் கலைஞர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த செஃப் தாமுவின் உடல், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பிறகு அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.