பிரமாண்டமாக மாறும் மும்பை விமான நிலையம்.. கலைநயத்துடன் புனரமைக்கப்படும் டெர்மினல் – I

மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட உள்ளது. விமான நிலைய விமான நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டத்தில் டெர்மினல் 1-யின் மறுவடிவமைப்பு மும்பையின் கலாசாரம், பராம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கலைநயத்துடுன் மாற்றப்பட உள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 1 கடந்த 1964ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 62 ஆண்டுகள் ஆன நிலையில் ஸ்ட்ரக்ட்வெல் (2017) மற்றும் ஐஐடி மும்பை (2024) ஆகியவை மேற்கொண்ட ஆய்வில் டெர்மினல் 1ன் கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதும், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் டெர்மினல் 1-யை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் விமான நிலையத்தின் டெர்மினல் 1-யை புதுப்பிக்கும் பணி தொடர்பாக விமான நிலைய விமான நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் புதிய டெர்மினல் -1 புதுப்பிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பது தொடர்பான வரைபடங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி மும்பையின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பயணிகள் புறப்படும் பகுதியில் அவர்களை வரவேற்கும் வகையில் பிரமாண்ட நுழைவுவாயில், மும்பையின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுவர்களில் ஓவியங்கள், சூரியஒளி நேரடியாக விமான நிலையத்தின் உள்ளே விழும் வகையில் செக் – இன் ஹால் அமைக்கப்பட உள்ளது.

பயணிகள் காத்திருக்கும் இடுத்தில் தொங்கும் தோட்டம், பசுமையான செடிகள், கண்ணாடி வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள்அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் பகுதியில் ஃபிளமிங்கோ சிற்பத்துடன் கூடிய வரவேற்பு அரங்கு அமைக்கப்பட உள்ளது.

இதுதவிர மகாராஷ்டிராவின் பிரதான விமான நிலையமான இங்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதற்கு ஏற்ப இந்த டெர்மினல் விரிவாக உருவாக்கப்பட உள்ளது. மும்பை விமான நிலையத்தை எடுத்து கொண்டால் ஆண்டுதோறும் பயணிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இதனால் ஆண்டுக்கு வரும் ஒன்றரை கோடி பயணிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 2 கோடியாக மாறும். இதனால் பதிவு செய்யும் கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது 74 ஆக இருக்கும் கவுண்ட்டர்களின் எண்ணிக்கை 109 ஆக உயரும்.

‘செக்யூரிட்டி லேன்ஸ்’ எனும் பாதுகாப்பு பாதைகளின் அளவு 2.5 மடங்கு விரிவடைய உள்ளது. பயணிகளுக்காக 15 பாதைகளும், மாற்று பயன்பாட்டுக்காக 15 பாதைகளும் உருவாக்கப்படும். தொரட்பு மையங்கள் 7 ல் இருந்து 25 ஆகஅதிகரிக்கும். அதேபோல் வழக்கமான போர்டிங் கேட்கள் 12 இ-கேட்களால் மாற்றப்படும். லக்கேஜ்களை கொண்டு வரும் பெல்ட்டுகளின் எண்ணிக்கை 5ல் இருந்து 11 ஆக அதிகரிக்கும்.

கட்டுமான பணியின்போதும் விமான சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதால் இந்த பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்கான இடிப்பு பணி 2027 ஏப்ரல் மாதம் தொடங்கும். அதன்பிறகு புதிய கட்டுமான பணிகள் அதே இடத்தில் தொடங்கி முழுவதுமாக 230ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவ பெறும்.

இந்த பணி முடிவடைந்தவுன் மும்பை விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பயணிகளை கையாளும் திறன் என்பது 65 மில்லியனாக (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்)உயரும். அதுமட்டுமின்றி இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் பயணிகளுக்கு சிறந்த கலாச்சார அடையாளம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை நிச்சயம் வழங்கும்.
இந்த காலக்கட்டத்தில் விமான போக்குவரத்து டெர்மினில் 2வில் G+3வடமேற்கு பியரில் இருந்து வழங்கப்படும் என மும்பை சத்ரபதி சிவராஜி சர்வதேச விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.