பிரான்சில் தொடரும் போராட்டம்: இத்தாலி, அல்பேனியாவிலும் வன்முறை

திரானா: அல்பேனியாவில் பார்லிமெண்ட் மீது மாணவர்கள் அமைப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர்.

பிரான்சில் அதிக செலவினங்கள், சமநிலையற்ற பொருளாதாரம் மாணவர்களை வீதிகளில் இறங்கி போராட வைத்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தில் பிரான்ஸ் பற்றி எரிந்தது. நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, போராட்டங்களில் இறங்கினர்.

பிரான்ஸ் போலவே இத்தாலியிலும் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர். கற்கள், பெட்ரோல் குண்டுகள் என வன்முறைகள் அரங்கேறின. வெனிஸ், பதுவா என பல நகரங்களில் மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நிலவியது.

பிரான்ஸ், இத்தாலியை போலவே, அல்பேனியாவில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் குதித்த மாணவர்கள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களை அடித்து நொறுக்கினர். தீ வைத்து சேதப்படுத்தினர். போலீஸ் ஸ்டேஷன், உள்துறை அமைச்சக நுழைவுவாயில் தீ வைத்து எரிக்கப்பட்டன.

போராட்டம் தீவிரம் அடைந்து, தலைநகர் திரானாவில் பார்லிமெண்ட் மீது மாணவர்கள் அமைப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் என்று போராடிய அவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி விரட்டி அடித்தனர்.

Source link