டெல்லி,
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி மரக்கன்று நட்டார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.
பிரிக்ஸ் உச்சி மாநாடு
இதனிடையே பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தலைமை ஏற்றுள்ள இந்த உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மரக்கன்று நட்ட பிரதமர் மோடி
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மாநாடு நடைபெறும் டெல்லி பாரத் மண்டபத்திற்கு வெளியே பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின் பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்பட உலகத்தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி மரக்கன்று நட்டார்.
