நமது நிருபர்
பிரிட்டனின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாமின் அமைச்சரவையில், நாட்டின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்திய வம்சாவளி எம்பி கனிஷ்க நாராயண் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண் முதல் ஏஐ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆன்டி பர்ன்ஹாம் அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் பட்டியல்:
* ஆன்டி பர்ன்ஹாம்- பிரதமர்
* ஜான் ஹீலி- நிதி அமைச்சர்
* எட் மிலிபண்ட்- வெளியுறவுத்துறை அமைச்சர்
* ஷபானா மஹ்மூத்- உள்துறை அமைச்சர்
* வெஸ் ஸ்ட்ரீட்டிங்- பாதுகாப்பு துறை அமைச்சர்
* யுவெட் கூப்பர்- சுகாதாரத்துறை அமைச்சர்
* லூசி பவல்-கல்வித்துறை அமைச்சர்
* ஏஞ்சலா ரேனர்- வீட்டு வசதி துறை அமைச்சர்
* கனிஷ்க நாராயண்- ஏஐ துறை அமைச்சர்
யார் இந்த கனிஷ்க நாராயண்?
பீஹாரில் பிறந்து சிறுவயதில் கார்டிபிற்கு குடிபெயர்ந்த நாராயண், ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம், ஸ்டான்போர்ட் பல்கலையில் எம்.பி.ஏவும் படித்தார். இவர் தற்போது எம்.பி.,யாக உள்ளார்.
