பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் அரசுக்கு ரூ.3.25 லட்சம் கோடி வருவாய்

மொபைல் போன் உற்பத்திக்கான ‘பி.எல்.ஐ.,’ எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 19,000 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அரசுக்கு 3.25 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. நேர்முக வரியாக 25,000 கோடி ரூபாயும், ஜி.எஸ்.டி., வரியாக 3 லட்சம் கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. மின்னணு சாதன உற்பத்தி துறையில் 25 லட்சம் பேரும், மொபைல் உற்பத்தியில் 12 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த நிதியாண்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 75 சதவீதமாக இருந்த இறக்குமதி, தற்போது 0.02 சதவீதமாகக் குறைந்துள்ளது.

– அஸ்வினி வைஷ்ணவ்,

மத்திய அமைச்சர் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

Source link