துக்ளக் ஸ்டைலில் தவெக அரசு நடப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் ஜோசப் விஜய்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
துக்ளக் ஸ்டைலில் தவெக அரசு
அப்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து பேசிய அவர், பட்டினப்பாக்கம் பள்ளிகள், தேவாலயங்கள் நிறைந்த பகுதி எனவும், கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி எனவும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் அப்பகுதியை வளர்ச்சியடை செய்வதற்கும் கூட போதிய இடம் இல்லாத பகுதி என தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை சூழல் பாதிக்கப்படும் எனவும் கூறிய அவர், முதல்வரின் வீடு அருகில் இருப்பதாலே அங்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த ஆட்சி துக்ளக் ஸ்டைலில் நடப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
கூட்டணி குறித்து அறிவிப்பு
தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் உள்ள அமமுக வருகிற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
Source link
