புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து

– நமது நிருபர் –

மிகத் தீவிரப் புயலாக கரையைக் கடந்து வரும் அர்னாப் – ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் ஏனாம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருவதாக சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி இடையே இயக்கப்படும் 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து செல்லும் 6 விமானங்களும், வருகை தரும் 6 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் முற்றிலும் விலகிய பின்பு தான் சேவை மீண்டும் துவங்கும்.

Source link