வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டெல்டா மற்றும் வட இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைப்பு, தெற்கு நோக்கி விலகிச் சென்றுள்ளதால் சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழை வாய்ப்பு முழுமையாக தவறிப்போனது.
இருப்பினும், இன்று நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரத்திற்குப் பிறகு இந்த மழைப் பொழிவும் குறையத் தொடங்கும். இதற்கிடையில், வட இலங்கைப் பகுதிகளில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும்.
The Low-Pressure System Is Now Off the Delta / North Sri Lanka Coast, Dry days for Tamil Nadu from tomorrow
=============
Today Rainfall areas
—————–
Mostly, the entire state is likely to experience a break in rainfall. Nagapattinam, Tiruvarur, Ramanathapuram, Kumari,… pic.twitter.com/wMXgOLOo5X— Tamil Nadu Weatherman (@praddy06) October 26, 2026
அதேவேளையில் ‘அர்னாப்’ புயல் கீழடுக்குக் காற்றை தன்னை நோக்கி ஈர்த்து விலகிச் செல்வதால், செவ்வாய் மதியம் முதல் தமிழ்நாடு முழுவதும் மழை படிப்படியாகக் குறைந்து, வரும் நவம்பர் 1-ஆம் தேதி வரை வரண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விவரங்கள்:
கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொரசக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விருகாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்ன சேலம் வட்டம் ஈரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய குறிப்பிட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
