அதேவேளையில், ‘கீட்ரூடா’ (Keytruda) என்ற உயர்தர மருந்தின் ஒரு குப்பி விலை ₹2,16,500 என்ற அளவிலும், ‘ரிபோக்சிக்லிப்’ (Ribociclib) மருந்தின் விலை ₹24,435 என்ற அளவிலும் மாற்றமின்றித் தொடர்கின்றன. அதேபோல டாக்ரிசோ, டெசென்ட்ரிக், டார்சலெக்ஸ், இம்பின்ஸி போன்ற சில இறக்குமதி மருந்துகளின் விலைகளில் மாற்றம் ஏதுமில்லை.
இந்த மருந்து விலை குறைப்பின் மூலம் புற்றுநோயாளிகளுக்கு ஆண்டுக்குச் சுமார் ₹2,500 கோடி வரை மருத்துவ செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், புற்றுநோய் சிகிச்சையில் மருந்துகள் மட்டுமின்றி அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை (Radiation), பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனை கட்டணங்கள் என பல செலவுகள் இருப்பதால், இந்த விலை குறைப்பின் பலன் நோயாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை அரசு கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
