புழல் அருகே காப்பகத்தில் மனநலம் பாதித்த 2 சிறுமிகள் மாயம்

Summary

2 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து மாயமானது குறித்து அப்பகு–தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமிகள் மாயம்

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பெண் குழந்தைகளுக்கான இலவச காப்பகம் உள்ளது. இது 2017 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பாகத்தில் மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட பெண் என 36 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீசார் வழக்கு பதிவு

இதில் 2 சிறுமிகள் கடந்த 21-ந் தேதி இரவு காப்பகத்தின் முதல் மாடியில் உள்ள மரத்தின் வழியாக கீழே இறங்கி சென்றதாக தெரிகிறது. அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காப்பகத்தின் நிர்வாகி சைலஜா பாஸ்கர் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறுமி–களையும் தேடி வருகின்றனர். 2 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து மாயமானது குறித்து அப்பகு–தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link