கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் விமான பயணத்தை காட்டிலும் பயன் தருமா? உத்யன் எக்ஸ்பிரஸை விட சிறந்ததா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
வரும் நவம்பர் ஒன்றாம் தேதி பெங்களூரு – மும்பை இடையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே வாரியத்திடம் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் என்ற பெருமையை பெறும். 27651 / 27652 என்ற ரயில் எண் உடன் 16 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படவுள்ளது. ஏசி 3 டயர் 11 பெட்டிகள், ஏசி 2 டயர் 4 பெட்டிகள், ஏசி முதல் வகுப்பு ஒரு பெட்டி என வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு டூ மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
மொத்தமுள்ள 1,118 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 16 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ நேர அட்டவணை வெளியிடப்பட்டால் மட்டுமே விவரங்கள் தெரிய வரும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பல்வேறு வசதிகள் இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்பர். இந்நிலையில் யாருக்கு வசதியாக இருக்கும், எப்படியான வசதிகளை தரும் என்பது தான் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.
ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கிடைப்பது எப்படி? முழு தகவல் இதோ…
ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் கட்டணம் அதிகம்
டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் பிஸினஸ் பர்சனாலிட்டீஸ், மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் கட்டணம், பயண நேரம், பயன்பாடு போன்றவை விமானப் பயணம், உத்யன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இதன்மூலம் சூழலுக்கு ஏற்ற சரியான போக்குவரத்து வசதியை தேர்வு செய்து பயணிக்க முடியும்.
பெங்களூரு டூ மும்பை – 3 விதமான பயண அனுபவம்
பயணம் பயண நேரம் ஏசி 3 டயர் / எகானமி சேவை வந்தே பாரத் ஸ்லீப்பர் 16 மணி நேரம் ரூ.2,600 நேரடி விமானம் (இண்டிகோ, ஆகாசா, ஏர் இந்தியா) 1 மணி 45 நிமிடங்கள் (ஏர்போர்ட்டில் 4 மணி நேரம்) ரூ.3,200 முதல் ரூ.5,500 உத்யன் எக்ஸ்பிரஸ் 24 மணி நேரம் ரூ.1,450
வந்தே பாரத் ஸ்லீப்பர் vs விமானப் பயணம்
ரயிலில் ஏசி மூன்றாம் வகுப்பில் 2,600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் விமானத்தில் குறைந்தது 3,500 ரூபாய் டிக்கெட் கட்டணம் மட்டுமே இருக்கும். இதுதவிர லக்கேஜ் அதிகமானால் அதற்கேற்ப கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விமான நிலைய கேப்களை புக் செய்தால் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும். உதாரணமாக கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகரின் மையப் பகுதிக்கு செல்ல குறைந்தது 1,500 ரூபாய் செலவாகும். மேலும் 16 மணி நேரம் தொடர் பயணம். இது இரவு நேர பயணம் என்பதால் சொகுசாக தூங்கி கொண்டே செல்லலாம். பகலில் விமானத்தில் பயணித்து வேலை நேரத்தை செலவழிப்பது, ஒரு நாளின் ஒரு பாதியை செலவழிப்பது, ஓட்டல் புக் செய்து கட்டணம் செலுத்தும் செலவீனங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் vs உத்யன் எக்ஸ்பிரஸ்
உத்யன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை பயண நேரம் சுமார் 24 மணி நேரம் ஆகிறது. எனவே வந்தே பாரத் ஸ்லீப்பர் 8 மணி நேரம் வரை நேரத்தை மிச்சப்படுத்தும். அதுமட்டுமின்றி செமி ரிஜிட் கப்ளர்கள் இருப்பதால் ரயிலில் உராய்வு சத்தங்கள் ஏதுமின்றி, அதிர்வுகளை உணராமல் பயணிக்கலாம்.சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உத்யன் எக்ஸ்பிரஸ், விமானப் பயணம் ஆகியவற்றை காட்டிலும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.
Source link
