பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை? அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் – நீதிமன்றம் – madurai high court order tn government take decision on menstrual leave policy

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். கூலி வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறும் வகையில் அரசு நடவ டிக்கை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் கால த்தில் ஊதியத்துடன் விடுமுறை வழங்குவது குறித்து தொழிலாளர் நலத்துறையின் தொடர்புடைய உயர் அதிகாரி, நேரிலோ அல்லது காணொளி வாயிலாக ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவும், பதில் மனு தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மாதவிடாய் விடுப்பு

மதுரை மாவட்டம் கோமதிபுரம், நர்மதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , தமிழகத்தில் பெண் பணியாளர்கள், சிலர் மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியால் அவதிப்படுகின்றனர். இந்த சூழலில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு

இந்தியாவில், கர்நாடகா, பீஹார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு தொடர்பான கொள்கைகள் நடைமுறையில் உள்ளன. எனவே, மகளிர் நலன் கருதி, அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்களில் பணி புரியும், பெண் ஊழியர்களுக்கான விரிவான ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் சொன்ன முக்கிய விஷயங்கள்

இந்த பொதுநல மனு, நீதிபதிகள் C.V. கார்த்திகேயன், R. சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்த தகவல் களை பெற்றுள்ளார். தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசின் கொள்கை முடிவே இல்லை எனும் போது அதனை உருவாக்குவது அவசியம். முக்கியமற்றது போல தோன்றலாம் ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக பெண்கள் இருக்கும் சூழலில், அவர்களது பிரச்சனையை கருத்தில் கொள்வது மிகவும் அவசியமானது.

தமிழக அரசு ஆலோசனை நடத்துமா ?

எனவே இப்போது மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாம். இதில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமல்லாமல் கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் உரிய முடிவு எடுக்கலாம். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையின் தொடர்புடைய உயர் அதிகாரி, நேரிலோ அல்லது காணொளி வாயிலாக ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவும், பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போது பெண்களுக்கான பாதுக்காப்பில் இந்த அரசு துணை நிற்கும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பெண் பாதுக்காப்புகாக சிங்கபெண் திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் தற்போது தமிழக பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புடன் ஊதியம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.. இதனை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source link