கருப்பு உடை அணிந்து ’இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (21-07-26) மாலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது வன்முறை நடத்தியதற்குக் கண்டனங்களைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கல்வித்துறையில் நிலவும் முறைகேடு மற்றும் நிர்வாக முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டுமென முழக்கமிட்டனர். 

இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அவர்கள் போராட்டத்தைக் கைவிடாததால், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீஷன் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று காலையில் நாடாளுமன்ற அவை தொடங்க இருந்த நிலையில், இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க நேரம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்னர். இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரஜ்ஜு அவையில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Source link