பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 திட்டம்; அடுத்த மாதம் அமல்?

டெல்லியில் கடந்த  சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பாஜக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.  அந்த வகையில், மிக முக்கிய தேர்தல் வாக்குறுதியான, மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.  

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ’லட்சுமி யோஜனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள  இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் பயனாளிகள் வருகின்ற ஆகஸ்ட் முதல் நாளில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக, தனியாக இணைய தள வசதி உருவாக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 28 அன்று ரக்‌ஷா பந்தன் விழா வரவுள்ள நிலையில், அன்றைய தினம் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.  

இந்த திட்டத்திற்காக 5100 கோடி ரூபாய் ஒத்துப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த திட்டத்தின் மூலமாக 17 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 21 முதல் 60 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களது ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

Source link