துபாய்,
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் மோதுகின்றன.
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது.
இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றன. இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இந்தியா, பாகிஸ்தானும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசமும் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை – பாகிஸ்தான்
இந்நிலையில், ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றிபெறும் அணி நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
