பெரம்பூருக்கு குட் நியூஸ்… சென்னை டூ அரக்கோணம் ரூட்டுக்கு க்ரீன் சிக்னல்

சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் வரை 68 கி.மீட்டர் தூரத்திற்கு 5 மற்றும் 6-வது ரயில் பாதைகளை அமைப்பதற்கு இறுதிக்கட்ட சர்வே நடத்துவதற்கு ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தின் வழியாக தற்போது 80-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சென்னையில் இருந்து செல்கின்றன. 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா… களத்தில் இறங்கிய விஜய்; டி.கே. சிவகுமார் உடன் சந்திப்பு?

விரைவு ரயில்கள் இயக்கப்படும் போது புறநகர் மின்சாரங்களை தாமதமாக இயக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை, பெங்களூரு, மைசூரு, ஜார்கண்ட் போன்ற இடங்களுக்கு இந்த வழித் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த ரயில் சேவை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும்  பயணிகள் போக்குவரத்தும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே தான் பெரம்பூரில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் நான்காவது ரயில்  முனையம் அமைக்கும் பணிகளை ரயில்வே வாரியம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். நான்காவது ரயில் முனையமும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பயணிகள் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைப்பதற்கான இறுதி சர்வே நடத்தி முடித்து நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதே சமயம் தமிகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு இதுவரை 26% நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 22,888 கோடி செலவில் 1,700 கி.மீ தூரத்திற்கு 9 புதிய ரயில் பாதை, 3 இரட்டை ரயில் பாதை திட்டங்கள் என மொத்தம் 15 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் ரயில் பாதை திட்டத்திற்கு மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் நிலையில் 3,274 ஹெக்டேர் நிலம் மட்டுமே இன்னும் கையகப்படுத்தாமல் இருப்பதன் காரணமாக 26 சதவிகித நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டிருப்பதால் பல ரயில்வே திட்டங்கள் தாமதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link