பேரை கேட்டாலே அதிருதுல்ல: ஆட்சியே மாறினாலும் இவரது சீட் மட்டும் மாறாது; பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி

பிரிட்டன் பிரதமராக இருந்த சர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், வேல்ஸ் நாட்டின் முதல் சிறுபான்மையின எம்.பி-யாக வரலாறு படைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண் தனது செயற்கை நுண்ணறிவுத் துறை இணை அமைச்சர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: தலைநகரை முற்றுகையிட ஆயத்தம்

பீகாரில் பிறந்து, சிறுவயதிலேயே கார்டிஃப் நகருக்குக் குடிபெயர்ந்த கனிஷ்கா நாராயண், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். இவர் தற்போது வேல் ஆஃப் கிளாமோர்கன் (Vale of Glamorgan) தொகுதியின் எம்.பி-யாக உள்ளார்.

ஆண்டி பர்ன்ஹாம் அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் பட்டியல்

  • பிரதமர் – ஆண்டி பர்ன்ஹாம் 
  • நிதி அமைச்சர் – ஜான் ஹீலி 
  • வெளியுறவுத் துறை அமைச்சர் – எட் மிலிபாண்ட் 
  • உள்துறை அமைச்சர் – ஷபானா மஹ்மூத் 
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் – வெஸ் ஸ்ட்ரீடிங் 
  • சுகாதாரத் துறை அமைச்சர் – யுவெட் கூப்பர் 
  • கல்வித் துறை அமைச்சர் – லூசி பவல் 
  • வீட்டுவசதித் துறை அமைச்சர் – ஏஞ்சலா ரெய்னர் 
  • வணிகம் & வர்த்தகத் துறை அமைச்சர் –  ஜோனதன் ரெனால்ட்ஸ் 
  • ஏ.ஐ துறை இணை அமைச்சர் – கனிஷ்கா நாராயண்

அரசியல் திருப்பங்களும் ஹீலியின் வருகையும்

கடந்த மாதம் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஜான் ஹீலி, ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் ஏற்பட்ட மோதலில் கீர் ஸ்டார்மரை பகிரங்கமாக விமர்சித்து ராஜினாமா செய்தார். இதுவே ஸ்டார்மரின் பதவி விலகலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தற்போது ஆண்டி பர்ன்ஹாமின் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல், முன்னாள் லேபர் கட்சித் தலைவரான எட் மிலிபாண்ட் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது வெஸ்ட்மின்ஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து தீவிரமாகப் பேசும் மிலிபாண்டை, எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடநோக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தாலும், லேபர் கட்சியினரிடையே அவருக்கு நல்ல ஆதரவு நிலவுகிறது.

தற்போது புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் மற்றும் நிதி அமைச்சர் ஜான் ஹீலிக்கு, முந்தைய அரசு விட்டுச் சென்ற 5 பில்லியன், சுமார் 500 கோடி பவுண்ட் பாதுகாப்பு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதே தற்போது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Source link