பொதுச் சேவையில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு: துணை ஜனாதிபதி பாராட்டு

புதுடில்லி: அரசியலமைப்பு விழுமியங்கள், பணிவு, கருணை மற்றும் பொதுச் சேவையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அர்ப்பணிப்புக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டி தெரிவித்து உள்ளார்.

திரவுபதி முர்மு கடந்த 2022 ஜூலை 22 ம் தேதி ஜனாதிபதி ஆக பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

இதனை நினைவுகூறும் வகையில், ஐந்து புத்தகங்களை ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சி.பி.ஆர்., பேசியதாவது: ஒடிசாவின் ஒரு தொலைதூர பழங்குடி கிராமத்தில் இருந்து நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவிக்கு ஜனாதிபதியின் பயணம், இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மைக்கும் ஒரு சக்திவாய்ந்த சான்று என்று கூறினார்.

மேலும், அரசியலமைப்பு விழுமியங்கள் பணிவு, கருணை மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.

Source link