போட்டிக்கு படங்கள் இல்லை; 2.0 பட வசூலை முறியடிக்க வேகமாக முன்னேறும் ஜெயிலர் 2: 10-வது நாள் கலெக்ஷன் அப்டேட்

எழுதியவர்: கிருதி சோனாலி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், 10-வது நாளில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம், உலகளவில் ரூ600 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 14-ந் தேதி ரிலீஸ் ஆனது. 

முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஜெயிலர் 2 முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 700 கோடி என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. 10-ஆம் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 16.25 கோடி வசூலித்துள்ள இத்திரைப்படம், உலக அளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை நெருங்கி வருகிறது. 

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘2.0’-வின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த வசூலை முறியடிக்க ஜெயிலர் 2 படத்திற்கு இன்னும் ரூ. 25 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. இப்பட்டியலில் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலகளவில் ரூ. 605.90 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

திரைப்பட வசூல் கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் (Sacnilk) தகவலின்படி, 2023-ல் மெகா ஹிட் அடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2, இந்தியாவில் மொத்தம் ரூ. 436.80 கோடி மொத்த வசூலையும் (Gross), ரூ. 373 கோடி நிகர வசூலையும் (Net) ஈட்டியுள்ளது. மேலும், இதன் உலகளாவிய மொத்த வசூல் ரூ. 666.30 கோடியை எட்டியுள்ளது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகிய புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர். யோகி பாபு மற்றும் நமோ நாராயணாவின் நடிப்பு கவனம் ஈர்த்துள்ள அதே வேளையில், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் மற்றும் சிவ ராஜ்குமார் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்கள் (Cameo) ரசிகர்களுக்குப் பெரு விருந்தாக அமைந்துள்ளன.

‘ஜெயிலர் 2’ தன் முதல் வாரத்திலேயே முதல் பாகத்தின் வாழ்நாள் உலகளாவிய வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது. 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் ரூ. 604.7 கோடி வசூலித்திருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தின் வசூல் சாதனை அத்தொடருக்கு மிக முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.

ரசிகர்களின் கூட்டம் தொடர்ந்து அலைமோதுவதால், வரும் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள பிரம்மாண்ட காவியப் படைப்பான ‘ராமாயணா’ வெளியாகும் வரை ‘ஜெயிலர் 2’ இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தனது வசூல் வேட்டையைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link