போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்; அமித்ஷா வேதனை

புதுடில்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்த போது உயிரிழந்த விக்ரம்ஜீத் சிங்கின் குடும்பத்தினரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார்.

அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது உயிரிழந்த விக்ரம்ஜித் சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்தேன்.

இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கட்டும். பஞ்சாபில் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கமும், போதை கடத்தல்காரர்களின் துணிச்சலும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளன.

பகவந்த் மான் தலைமையிலான ஆட்சியில், ஒருபுறம் பஞ்சாப் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். மறுபுறம், இதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.

பஞ்சாப் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவையும் போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Source link