போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதை உறுதி செய்வோம்; அமித்ஷா திட்டவட்டம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியைச் சேர்ந்த, போதைப்பொருள் விற்பனையை எதிர்த்துப் போராடிய பர்விந்தர் சிங் ஜோட்டா, குல்சார் சிங் மற்றும் பிக்ரம்ஜித் சிங் கொல்லப்பட்டனர். இவர்களது குடும்பத்தினரை அக்டோபர் 20ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசுகிறார்.

அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது; பஞ்சாபை போதைப்பொருள் பயன்பாடு எனும் பாதாளத்தில் தள்ளுவதற்கு ஆம் ஆத்மி கட்சி அரசு எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை; பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளன.

செயற்கை போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக அண்மையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) அன்று நான் சந்திக்க உள்ளேன். ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுடன் செழித்தோங்கும் இந்தக் கடத்தல்காரர்களால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

போதைப்பொருள் வணிகத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை மவுனமாக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது; மாநில மக்கள் இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தேடிப் பிடித்து மத்திய அரசு சிறையில் அடைக்கும்; பஞ்சாப் மற்றும் ஒட்டுமொத்த தேசமும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபடுவதை உறுதி செய்வோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Source link