மதுபோ@தையில் கார் ஓட்டிய பெண் காவலர், எதிரே வந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் கலிபடல் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் அஸ்வினி புல்சந்த் கீகன் (39). இவர் கடந்த செவ்வாய்க் கிழமை (27-10-26) அன்று காலை, புனேவின் மஞ்சரி பகுதியில் உள்ள சாலையில் மதுபோதையில் தவறான (எதிர்) பாதையில் காரை ஓட்டியுள்ளார். இதனால், அந்த வழியில் வந்தவர் மீது விபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. எனினும், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இதனால், அந்த கார் தவறான வழியில் வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த நபர், கார் ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது மதுபோதையிலிருந்த காவலர் அஸ்வினி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஆத்திரமடைந்த அஸ்வினி, அந்த நபரை அநாகரிகமான முறையில் பேசி, அவரை தாக்கவும் முயன்றார். அஸ்வினி, அவரை தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, மதுபோ@தையில் காரை ஓட்டிய பெண் காவலர் அஸ்வினி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் ஓட்டி வந்த காரில் நம்பர் பிளேட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காவலரே இது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
