”போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு வேலையில்லை”; இளைஞர்களை அச்சுறுத்துகிறதா பாஜக அரசு?

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்திய நாத் பொறுப்பு வகித்து வருகிறார். இதனிடையே, அடுத்த ஆண்டு அங்கு மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் அட்ர்ஹிர்ச்சியை ஏற்படுத்து. 

அம்மாநிலத்தின் பணியாளர் நலத்துறை சார்பில் கடந்த புதன் கிழமை (28-10-26) அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ”வன்முறை மூலமாக ஆட்சி மாற்றம் கோரும் அல்லது அரசு அமைப்புகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது” என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, ”ஒவ்வொரு அரசுப் பணிகளுக்கும் தேர்வாகும் நபர்களின் பின்னணி, நன்னடத்தை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும். இதனை காவல்துறையினர் 30 நாட்களில் வழங்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, “ஒருவர் அரசுப் பணிக்குத் தேர்வாகும்போது ஆவணங்கள் சரிபார்ப்பு தேதியிலிருந்து, முந்தைய 3 ஆண்டுகள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால் அவர் இன்னும் கூட அதே செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கருதப்படும்” என்பதால் அவருக்கு அரசு வேலை வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிகள் மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் நேரடி நியமனங்களுக்கு இவை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சமீபத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் இளைஞர்கள் பெருந்திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே பாஜக அரசு இந்த மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.  

குறிப்பாக, சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்புக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இது அமைதியான முறையில் போராடும் உரிமையை முடக்கும் முயற்சி என்றும்  விமர்சித்துள்ளன.